உசிலம்பட்டியில் விவசாயிகள் போராட்டம்


உசிலம்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
x

உசிலம்பட்டியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி மதுரை சாலையில் உள்ள தி்.விலக்கு அருகே விவசாய சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக நேற்று கையில் கரும்பு ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு போதிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 வரை உயர்த்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையில் கோர்ட்டு உத்தரவுப்படி 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Next Story