திருவாடானையில் 20-ந் தேதி நடக்க இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்


திருவாடானையில் 20-ந் தேதி நடக்க இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானையில் 20-ந் தேதி நடக்க இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று சமரச கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை ஆர்.எஸ்.மங்களம் வட்டாரத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் நெற்பயிர்கள் அனைத்தும் முழுமையாக கருகிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகளின் சார்பில் இந்த மாதம் 20-ந்தேதி அன்று விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடக்க உள்ளதாக அறிவித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் துணை தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.இதில் பிப்ரவரி மாதத்திற்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதாக வருவாய்துறை சார்பில் உறுதியளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருவாடானை ஆர்.எஸ். மங்களம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story