விவசாயிகள் சாலை மறியல்


விவசாயிகள் சாலை மறியல்
x

நாங்குநேரி அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி மற்றும் கடம்போடுவாழ்வு குளங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எனவே தற்போது பச்சையாறு அணை நாங்குநேரியான் கால்வாயில் பாய்ந்து வரும் தண்ணீரை இந்த ஊர் குளங்களுக்கு திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து உடனே பதில் வரவில்லை என கூறி நாங்குநேரி- களக்காடு ரோட்டில் கலுங்கடியில் அந்த கிராம விவசாயிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, தாசில்தார் இசக்கிபாண்டி ஆகியோர் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


1 More update

Next Story