விவசாயிகள் மண்ணின் நிலை குறித்து ஆராய்ந்து பயிரிட வேண்டும்


விவசாயிகள் மண்ணின் நிலை குறித்து ஆராய்ந்து பயிரிட வேண்டும்
x

விவசாயிகள் மண்ணின் நிலை குறித்து ஆராய்ந்து பயிரிட வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

திருப்பத்தூர்

விவசாயிகள் மண்ணின் நிலை குறித்து ஆராய்ந்து பயிரிட வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

சிறப்பு முகாம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், பச்சூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

இதில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள், உளுந்து ராகி விதைகள், பழச்செடிகள், தொகுப்பு மற்றும் காய்கறி விதை தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

உலகிலேயே அதிகமான நெற்பயிர்கள் விளைவது தமிழ்நாடு ஆகும். நம்முடைய விவசாயத்தின் அடிப்படை கால்நடைகள் தான்.

அது தற்போது இல்லாத போனதால்தான் நாம் பால் பாக்கெட்டை வாங்கும் நிலை வந்துள்ளது. ஒரு மண் உயிரோடு வாழ்ந்தால் தான் நாம் உயிரோடு வாழ முடியும். நாம் என்ன நினைக்கிறோம் என்றால் அதிகமான விளைச்சல் தேவை என்று உரங்களை அதிகமாக பயன்படுத்தி விட்டோம்.

கால்நடைகளின் சாணம் மண்ணுக்கு முக்கிய உரமாகும். ஆனால் அனைத்து விவசாயிகளும் உரங்களை தேடி செல்கின்றனா்.

மண்ணின் நிலை

அதுமட்டுமில்லாமல் விவசாய நிலங்களில் மரங்களை வளர்ப்பதை தவிர்த்து விட்டனர். மரங்கள் அதிக அளவில் இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

மரங்களை வளர்ப்பதன் மூலம் மண்ணிற்கு புரதசத்து கிடைக்கிறது. இந்த புரதச்சத்து பூமிக்கு கிடைக்கின்ற பொழுது தான் மண் வளமாக இருக்கும். மண் வளமாக இருக்கும் பொழுது தான் விளைகின்ற பொருட்கள் புரத சத்துடன் கிடைக்கும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் உங்களுடைய தரிசு நிலங்களை மாற்ற முடியும். நீர் வளத்தை பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் மூலம் நமது மண்ணின் நிலை குறித்து ஆராய்ந்து எந்த வகையான பயிர்களை பயிரிட வேண்டும் என்றும் பயிர் சுழற்சி முறையையும் கடைப்பிடிக்க வேண்டும். இத்திட்டத்தில் அணைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வு

அதைத்தொடரிந்து, பச்சூர் கிராமத்தில் 2 தொகுப்புகள் கண்டறியப்பட்டு, 23 ஏக்கர் சமன் செய்யும் பணிகளையும், பையப்பநாயக்கன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனையும், பச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.30½ லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டிடம் கட்டுமான பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, வேளாண்மை இணை இயக்குனர் அ.பாலா, துணை இயக்குனர்கள் பச்சையப்பன், ராமச்சந்திரன், துணை இயக்குனர் தோட்டக்கலை பாத்திமா, தாசில்தார் குமார், நாடட்றம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி முனுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story