6 ஆண்டுகளாக பயிர்க்கடன் வழங்காததை கண்டித்துகூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகைஓமலூர் அருகே பரபரப்பு


6 ஆண்டுகளாக பயிர்க்கடன் வழங்காததை கண்டித்துகூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகைஓமலூர் அருகே பரபரப்பு
x
சேலம்

ஓமலூர்

ஓமலூர் அருகே 6 ஆண்டுகளாக பயிர்க்கடன் வழங்காததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டுறவு சங்கம்

ஓமலூர் அடுத்த குண்டுக்கல் ஊராட்சி கொன்ரெட்டியூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கம் மூலம் பயிர்க்கடன், நகைக்கடன், சிறு தொழில் கடன், கறவை மாடுகள் உள்ளிட்ட கடன்களை பெற்று குண்டுக்கல் பகுதி மக்கள் பயன் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டதில் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முற்றுகை

அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு கடனும் இந்த கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் விவசாயிகள் மற்றும் மக்கள் எந்தவொரு கடனுதவியும் பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதைதொடர்ந்து நேற்று காலை குண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சரவணன், சிவக்குமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

கலைந்து சென்றனர்

அப்போது பங்குத்தொகை கட்டிய 9 விவசாயிகளுக்கு முதலில் கடன் வழங்குவதாகவும், தொடர்ந்து மற்ற விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கிருஷ்ணன் உறுதி அளித்தார்.

அப்போது விரைந்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


Next Story