பருத்தி பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள்


பருத்தி பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள்
x

பருத்தி பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள்

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூரில் பருத்தி பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி

திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 528 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது பருத்தி செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் வைக்க தொடங்கி உள்ளது. ஒரு சில இடங்களில் பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதிக வெப்ப நிலை நிலவுவதால் மாவு பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆள் பற்றாக்குறை, வேலை ஆட்களின் கூலி போன்ற பல்வேறு பிரச்சினை காரணமாக டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் காணூர் பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கும் பணி டிரோன் மூலம் நடைபெற்று வருகிறது.

ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 வரை செலவு

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,

பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிமாக ஈடுபட்டு வருகின்றனர். பருத்தி காய் காய்த்து அறுவைடைக்கு தயாராகும் நிலையில் கோடை வெப்பத்தினால் மாவு பூச்சி, இலைபேன் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. டிரோன் மூலம் பருத்தி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 வரை செலவாகிறது. இதன் மூலம் தேவையற்ற கூடுதல் செலவுகள், நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக பூச்சி மருந்து செலவும் குறைவாகிறது என்றார்.


Next Story