நெற்றியில், கருப்பு ரிப்பனால் பருத்தி பஞ்சுவை கட்டி விவசாயிகள் போராட்டம்


நெற்றியில், கருப்பு ரிப்பனால் பருத்தி பஞ்சுவை கட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 1 July 2023 1:19 AM IST (Updated: 1 July 2023 4:34 PM IST)
t-max-icont-min-icon

பருத்தி குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி நெற்றியில் கருப்பு ரிப்பனால் பருத்தி பஞ்சுவை கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

பருத்தி குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி நெற்றியில் கருப்பு ரிப்பனால் பருத்தி பஞ்சுவை கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் சிலர், நெற்றியில் கருப்பு ரிப்பன் மூலம் பருத்தி பஞ்சை கட்டிக்கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், பருத்தி குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தி குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம்

போராட்டத்தில் கடந்த ஆண்டு பருத்தி குவிண்டாலுக்கு ரூ.10,500-க்கு மேல் விலை போனது. ஆனால் இந்த ஆண்டு பருத்தி குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 500 மட்டுமே விலை போவதால் பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் விலையை அறிவித்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story