விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகளுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பூட்டுத்தாக்கு கிளைத் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, மாவட்ட தலைவர் கிட்டு, வட்டத் தலைவர் நிலவு குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். .

ஆர்ப்பாட்டத்தில் பூட்டுத்தாக்கு கிராமத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனை, நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரப்பாக்கம்- அம்முண்டி சந்திக்கும் இடத்தில் உயர்மட்ட சுரங்க மேம்பாலம், பூட்டுத் தாக்கு பிரதான பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்,

பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை பொதுமக்கள் செல்லும் வழிகளை மறித்து சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர்.

பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.


Next Story