விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பறக்கை கால்வாயை தூர்வாரக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
பறக்கை கால்வாயை தூர்வாரக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
20 வருடங்களாக தூர்வாராமல் புதர்மண்டி கிடக்கும் பறக்கை கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மோகன், ராஜநாயகம், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, பாசனத்துறை சபை தலைவர் வின்ஸ்ஆன்றோ, விவசாயி புலவர் செல்லப்பா, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் விஜி, விவசாய தொழிலாளர் சங்கமாவட்ட பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.