விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தில் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கோவிந்தராஜூ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பி.மேட்டூர், வைரிசெட்டிப்பாளையம் பகுதிகளில் அரசு நிரந்தர நெல் கொள்முதல் மையங்கள் அமைக்க கோரியும், கொள்முதல் மையங்களில் தானியங்களை உலர வைக்க சிமெண்டு களம் அமைக்க கோரியும், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளம், கால்வாய்களை தூர்வார கோரியும், ஜம்பேரியை ஆழப்படுத்தி, கரைகளை சீரமைக்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரிடம் கோரிக்கை குறித்து மனு அளிக்கப்பட்டது.


Next Story