விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மயிலாடுதுறை

பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் 2021-22-ம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி திருக்கடையூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தரங்கம்பாடி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சிம்சன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், மார்க்ஸ், மாவட்டத் துணைத் தலைவி குணசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே பாரபட்சம் இன்றி பயிர் காப்பீடு தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்கிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 More update

Next Story