விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பாரபட்சம் இன்றி வழங்கக் கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பாரபட்சம் இன்றி வழங்கக் கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் மேகநாதன், வைரவன், ஒன்றிய தலைவர் கருணாநிதி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 2021-22-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்த இழப்பீட்டு தொகை உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே பாரபட்சமின்றி இழப்பீட்டு தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி அரசுத்துறை நிறுவனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.