விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிள்ளையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
புவனகிரி,
சிதம்பரம் அருகே கிள்ளையில் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் கற்பனைச்செல்வம் தலைமை தாங்கினார். விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை முறையாக வழங்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொருளாளர் ஜீவா, நிர்வாகிகள் திருஞானம், கான் சாஹிப் பாசன சங்க தலைவர் கண்ணன், ஹாஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி நீதிவளவன், ராமதாஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார், மனிதநேய மக்கள் கட்சி சலாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story