விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரி திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் குணாநிதி முன்னிலை வகித்தார்.

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சேதம் அடைந்துள்ள நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகையினை பாகுபாடின்றி 100 சதவீதம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயிறுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story