விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யேஸ்வரர் கோவில் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் கீழகோபுரவாசல் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் குடிக்காணி குத்தகை சாகுபடிதாரா்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், குடிக்காணி சங்கத் தலைவா் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கோவில் நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து, முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும். வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மனை சார்ந்து வாழ்பவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் சிவகுரு.பாண்டியன், மாவட்ட நிர்வாகக் குழு நாராயணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாய சங்க ஒன்றிய துணைச்செயலாளர் தனியரசு நன்றி கூறினார். பின்னர் கோவில் செயல் அதிகாரி அறிவழகனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.