விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் மிக ஆபத்தை விளைவிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமையன் தலைமை தாங்கினார். நிர்வாகி சோமைய்யா முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் இந்திரஜித் விளக்க உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story