நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கும் விவசாயிகள்


நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்

திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போதிய அளவு வராததால் சாகுபடி செய்த குறுவை பயிர்கள் கருகின. சில இடங்களில் குளம் மற்றும் வாய்க்கால்களில் இருந்த தண்ணீரை கொண்டு மோட்டார் மூலம் இறைத்து குறுவை பயிர்களை காப்பாற்றி வந்த நிலையில் தற்போது ஆதிரங்கம் கட்டிமேடு, பிச்சன்கோட்டகம், சேகல் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இப்பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து வைத்துக்கொண்டு விற்பனை செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திறக்க நடவடிக்கை

திடீரென மழை பெய்தாலோ அல்லது பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் கிடந்தாலோ நெல் மூட்டைகள் வீணாக வாய்ப்புள்ளது. இதனால் நெல் மூட்டைகளை திறந்த வெளியில் பாதுகாப்பில்லாமல் விட்டுச்செல்ல முடியாததால் அங்கேயே காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story