10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம்
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணையை ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகள்வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி முதல் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14-வது நாளான நேற்று
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாநிலத் துணைத் தலைவர் அரசேந்திரன், பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன், மாவட்டச் செயலாளர் வேலு மந்திராச்சலம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வரதராஜ், இமயம் சரவணன் மற்றும் உடுமலைபேட்டையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






