விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
x

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 18-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story