திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி நடக்கிறது

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் பகுதியில் ஏற்படும் விவசாய குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடக்கிறது.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, வங்கிகள் துறை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். எனவே விவசாயிகள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள குறைகளுக்கு தீர்வு காண மனு அளித்து பயன்பெறலாம்.

1 More update

Next Story