பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்


பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து, பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், முறையான மண்வள மேம்பாடு அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த 2 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலை வழங்கப்படும். மேலும், தகவலுக்கு தொடர்புடைய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story