மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு   கட்சியினர் உண்ணாவிரதம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பூண்டி கிளை சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு நகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் தேவராஜன், பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.எம். திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து, கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு நந்தகோபால், அவினாசி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, மாவட்டக்குழு வெங்கடாசலம், பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு பாலசுப்பிரமணியம், மோகனசுந்தரம், வேலுச்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தை சி.பி.எம். மாவட்ட செயற்குழு ரங்கராஜ் முடித்து வைத்தார். முடிவில் பூண்டி கிளை சிவக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story