தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராபர்ட் கிங்ஸ்லி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜூணன் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், அவற்றை நிறைவேற்றக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story