ராதாபுரத்தில் உண்ணாவிரதம்


ராதாபுரத்தில் உண்ணாவிரதம்
x

கல்குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக்கோரி ராதாபுரத்தில் உண்ணாவிரதம் நடந்தது.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தனக்கர்குளம் பஞ்சாயத்து பசுமை இயக்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ராதாபுரம் தாலுகாவில் தனக்கர்குளம் பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களையும், விவசாயிகளையும், குடியிருப்பு பகுதிகளையும் பாதிக்கக்கூடிய கல்குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது. கல்குவாரியில் இருந்து வரும் கனரக வாகனங்களை கிராம சாலைகளில் செல்ல அனுமதிக்க கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் தனக்கர்குளம் பஞ்சாயத்து பசுமை இயக்க தலைவர் இசக்கியப்பன், வட்டார விவசாயிகள் நலச்சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் ராஜபவுல், தமிழக மக்கள் கழக மாவட்ட செயலாளர் கபிலன், நாம் தமிழர் கட்சி தொகுதி பொருளாளர் சிவராஜன், வீர தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் கணேசன், தமிழ் மீட்சி பாசறை மாவட்ட செயலாளர் ஜகசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை துணை தாசில்தார் கிருஷ்ணகுமாரிடம் வழங்கினர்.


Next Story