நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் உண்ணாவிரதம்


நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் உண்ணாவிரதம்
x

நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் உண்ணாவிரதம்

திருப்பூர்

திருப்பூர்

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு, திருப்பூர் மண்டலம் சார்பில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு குழு தலைவர் வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் சுந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலைப்பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வுதியம் வழங்க வேண்டும். எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் நாளிலே பணப்பயன்களை வழங்க வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.



Next Story