நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்
x

திருப்பத்தூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் வரவேற்றார். எம்.எல்.ஏக்கள் ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், நகர செயலாளர்கள் எஸ்.ராஜேந்திரன், வி.எஸ்.சாரதிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தை மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மாவட்ட அவைத் தலைவர் ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர் டி.கே.மோகன், மாவட்ட பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.தசரதன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜா ராணி பி.தாமோதரன், மாவட்ட மாணவர் துணை அமைப்பாளர் டி.சி.கார்த்திக், டி.என்.டி.கே.சுபாஷ், இளைஞர், மாணவர், மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள், நகராட்சி தலைவர்கள், ஒன்றியக் குழு தலைவர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் என மாவட்டம் முழுவதிலும் இருந்து பலர் கலந்துகொண்டனர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிர போராட்டம் நடைபெற்றது. முடிவில் இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல் ஜூஸ் கொடுத்து உண்ணாவிரத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story