உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கரூர்
க.பரமத்தி ஒன்றியம், ஆண்டி செட்டிபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து 110 கிலோ வாட் மின்சாரத்தை உயர் மின் கோபுரம் மூலம் தென்னிலை மேல்பாகம் ஊராட்சி, கூனம்பட்டி கரைத்தோட்டம் வரை கொண்டு செல்வதற்கான பணிகளை மின்சார வாரியம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கரூர் மாவட்ட கலெக்டர், புகழூர் வட்டாட்சியர், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு என அனைத்து இடங்களுக்கும் சென்று மனுக்கள் கொடுத்து வந்தனர்.
இந்தநிலையில் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தென்னிலை மேற்கு ஊராட்சி, கூனம்பட்டி மூக்கணாதந்தோட்டத்தில் விவசாயி ராஜா என்பவர் குடிசை அமைத்து நேற்று காலை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Related Tags :
Next Story