சிவகிரியில் உண்ணாவிரத போராட்டம்
சிவகிரியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களுக்கு நிரந்தரமாக தாமிரபரணி ஆற்று குடிநீர் மற்றும் கோம்பையாற்று குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சிவகிரிக்கு மேற்கே சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் மண் கடத்திச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகர பா.ஜனதா, த.மா.கா, அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி கட்சிகளின் சார்பாக சிவகிரி பஸ்நிலையம் அருகே உள்ள காந்தி கலையரங்கம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் போஸ், பா.ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் தங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓ.பி.எஸ். அணியின் சார்பாக சிவகிரி நகரச் செயலாளர் காசிராஜன், த.மா.கா. வட்டார செயலாளர் கென்னடி, பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத்தலைவர்கள் தேவர், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராகவன் வரவேற்றார். பா.ஜனதா ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ராமேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.