மதுக்கடைகளை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்


மதுக்கடைகளை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்
x

மதுக்கடைகளை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலையில் ஒரேஇடத்தில் அமைந்துள்ள 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த 2 மதுக்கடைகளையும் மூடக்கோரி நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை எதிரே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாசறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கந்தசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில தலைவர் ராமஅரவிந்தன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் நிர்வாகிகள் ராசுமோகன், வேலாயுதம், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story