அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்ணாவிரதம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்ணாவிரதம்
x

மறைஞாயநல்லூர் பொன்னன்காட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

மறைஞாயநல்லூர் பொன்னன்காட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரத போராட்டம்

வேதாரண்யம் நகராட்சி மறைஞாயநல்லூர் பொன்னன்காட்டில் 2 குடும்பத்தினருக்கு மின்சாரம் வசதியும், அப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உண்ணாவிரத்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் ரமேஷ், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சவார்த்தை நடத்தினர். இதில் 10 நாட்களில் சாலை வசதியும், அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்ைக எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story