மொபட் மீது வாகனம் மோதி தந்தை-மகள் பலி


மொபட் மீது வாகனம் மோதி தந்தை-மகள் பலி
x

வந்தவாசி அருகே மொபட் மீது சரக்கு வாகனம் மோதி தந்தை- மகள் பலியானார்கள்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே மொபட் மீது சரக்கு வாகனம் மோதி தந்தை- மகள் பலியானார்கள்.

மொபட்டில் சென்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நந்தியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 40). சென்னையில் லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் நந்தியம்பாடி கிராமத்திற்கு வருவது வழக்கம்.

அதன்படி ஊருக்கு வந்திருந்த அவர் நேற்று இரவு தனது விவசாய நிலத்தில் உள்ள மாடுகளில் பால் கறப்பதற்காக மனைவி மீரா (34), மகள் காருண்யா (12) ஆகியோருடன் மொபட்டில் விவசாய நிலத்துக்கு சென்றார். பால் கறந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

தந்ைத- மகள் பலி

சேத்துப்பட்டு ரோட்டில், பொன்னூர் மலை அருகில் வந்த போது எதிரே சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த சரக்கு வாகனம் மொபட் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஜெகதீஸ்வரன் மற்றும் காருண்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

பலத்த காயத்துடன் மீராவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொன்னூர் போலீசார் விரைந்து சென்று ஜெகதீஸ்வரன் மற்றும் காருண்யா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த காருண்யா வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் தந்தை-மகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story