வாலிபரை குத்திக்கொன்ற தந்தை கைது


வாலிபரை குத்திக்கொன்ற தந்தை கைது
x

தீபாவளி தினத்தன்று குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை குத்திக்கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

மதுரை

தீபாவளி தினத்தன்று குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை குத்திக்கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் தகராறு

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவரது மகன் கங்காதரன் (வயது 35). இவருக்கு வளர்மதி (25) என்ற மனைவியும், கங்கா, கவுரி என்று 2 மகள்களும் உள்ளனர். தந்தையும், மகனும் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில் செய்து வந்தனர்.

தீபாவளி அன்று காலையில் கங்காதரன் மது குடித்து வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் தந்தை செல்வராஜிடம் பணம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கங்காதரன் அதிகமான போதையில் இருந்ததால் தகாத வார்த்தைகளால் வீட்டில் உள்ள அனைவரையும் பேசியுள்ளார்.

குத்திக்கொலை

எனவே அவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் கத்தியை எடுத்து கங்காதரனை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கங்காதரன் பரிதாபமாக இறந்தார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தீபாவளி தினத்தன்று பெற்ற மகனை கத்தியால் குத்தி தந்தை கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

====


Related Tags :
Next Story