திருமங்கலத்தில் சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தந்தை-மகள் சாவு


திருமங்கலத்தில் சாலையோர தடுப்புச்சுவரில்  மோட்டார் சைக்கிள் மோதி தந்தை-மகள் சாவு
x

திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தந்தை-மகள் பரிதாபமாக இறந்தனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தந்தை-மகள் பரிதாபமாக இறந்தனர்.

கட்டிட தொழிலாளி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் விளாச்சேரி மொட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திவ்யா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு குரு, சபரி, ஹரி(6) ஆகிய 3 மகன்களும், மாரி, சுபா(2) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதில் மகள் மாரி மற்றும் மகன்கள் குரு, சபரி ஆகிய 3 பேரும் கள்ளிக்குடியில் உள்ள சித்தர் கூடத்தில் தங்கி படித்து வருகின்றனர்.

விபத்து

இந்நிலையில் நேற்று அய்யனார், மகன் ஹரி, மகள் சுபா மற்றும் உறவினர் சந்தனமாரி (37) ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் கள்ளிக்குடிக்கு மகன்களை பார்க்க சென்றனர்.

அவர்கள் திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு நான்கு வழிச்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அய்யனார் மற்றும் அவரது மகள் சுபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிகிச்சை

மேலும் படுகாயம் அடைந்த சந்தனமாரி மற்றும் ஹரி இருவரும் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை-மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story