மகள் திருமணத்தன்று விபத்தில் தந்தை சாவு


மகள் திருமணத்தன்று விபத்தில் தந்தை சாவு
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 10:27 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே மகள் திருமணத்தன்று விபத்தில் தந்தை இறந்தார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 55). இவர் சென்னையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மகள் திருமணத்திற்காக சொந்த ஊரான கீரனூர் கிராமத்திற்கு வந்தார். நேற்று முன்தினம் இவரது மகள் திருமண விழாவை முடித்துவிட்டு கருப்பையா தனது நண்பர் முனியசாமி (55) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கீரனூர் அருகே உள்ள ஊருணிக்கு குளிக்க சென்றனர். அங்கு குளித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது முதுகுளத்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்ைச பலனின்றி கருப்பையா இறந்தார். முனியசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story