தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தந்தை பலி


தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தந்தை பலி
x

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தந்தை பலியானார்.

அரியலூர்

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியை அடுத்த ஆலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 49). இவர் தனது மகன் பிரகாசுடன் மோட்டார் சைக்கிளில் அரியலூர் அருகே உள்ள ஓட்டகோவில் கிராமம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story