பாகப்பிரிவினை கேட்டு தகராறு செய்து தந்தை கொலை


பாகப்பிரிவினை கேட்டு தகராறு செய்து தந்தை கொலை
x
தினத்தந்தி 7 April 2023 10:12 AM GMT (Updated: 7 April 2023 1:47 PM GMT)

சொத்து தகராறில் பாகப்பிரிவினை செய்து தரக்கோரி தந்தையை காலால் மிதித்து சுவரில் மோதி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சொத்து தகராறில் பாகப்பிரிவினை செய்து தரக்கோரி தந்தையை காலால் மிதித்து சுவரில் மோதி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

பாகப்பிரிவினை கேட்டு தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் பழைய காலனியை சேர்ந்தவர் தாஸ் (வயது 59). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு தன்ராஜ் (30), தங்கராஜ் என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மகளை வேலூரில் தாஸ் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகன்கள் இருவரும் தந்தையிடம் சொத்துகளை பாகப்பிரிவினை செய்து தருமாறு கேட்டு தகராறு செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இதே பிரச்சினையை வலியுறுத்தி 2-வது மகன் தங்கராஜ் தகராறில் ஈடுபட்டார்.

ஆத்திரம்

அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் தந்தை தாசை காலால் எட்டி உதைத்தார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத அவர் தலையை பிடித்து சுவரில் இடித்தார். இதில் தாஸ் துடிதுடித்தபடி அலறி கீழே விழுந்ததில் அதே இடத்தில் இறந்து விட்டார்.உடலை பார்த்து தவமணி கதறி அழுதார். தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்ெபக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் விரைந்து சென்று தாஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மனைவி தவமணி புகார் அளித்தார். அதன்பேரில் தங்கராஜை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாகப்பிரிவினை தகராறில் பெற்ற மகனே தந்தையை மிதித்து சுவரில் மோதிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ற மகனே தந்தையை மித்து சுவரில் மோதிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story