தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்


தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டா் தெரிவித்தார்தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டா் தெரிவித்தார்

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளரை முதல்-அமைச்சர் தேர்வு செய்வார். எனவே மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் ஆகியவைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற செப்டம்பர் 15-ந் தேதிக்குள் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story