தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்
மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமான மோடி அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமான மோடி அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வன்முறையால் தலை, கை, கால்களில் ரத்தக்காயம் ஏற்பட்டு கட்டு போட்டுக் ெகாண்டு மணிப்பூர் கலவரத்தை நினைவுபடுத்தினர்.
அவர்கள், மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, வி.சி.க., எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க., அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.