தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில்தேசிய அளவிலான கருத்தரங்கம்


தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில்தேசிய அளவிலான கருத்தரங்கம்
x

தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் ஓர் அங்கமான தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்விக்குழுமத்தின் மேலாண் தலைவர் ரோவர் வரதராஜன், துணை மேலாண் தலைவர் ஜான்அசோக் வரதராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நடந்தது. மருந்தியலில் நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் பார்மசூட்டிகல் பகுப்பாய்வில் புதுமையான பரிணாமங்கள் என்ற தலைப்பில் நடந்த இந்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் நெப்போலியன் அறிமுக உரையாற்றினார். கருத்தரங்கில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் பார்மசூட்டிகல் டெக்னாலஜி துறையின் மருந்தியல் வேதியியல் தலைவரும், பேராசிரியையுமான புரட்சிக்கொடி, மதுரை மெடிக்கல் கல்லூரி வளாகத்தில் உள்ள மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் வேதியல் துறையின் இணை பேராசிரியர் உமாராணி, ஈரோடு நந்தா மருந்தியல் கல்லூரி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவருமான பிரபா ஆகியோர் மருந்து பகுப்பாய்வில் நவீன போக்குகள், புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதில் நவீன வளர்ச்சிகள் குறித்து வீடியோ விளக்கப்படத்துடன் பயிற்சி அளித்தனர். இதில் பல நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மருந்தியல் கல்லூரிகளில் இருந்து மருந்தியல் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். சிறந்த ஆய்வு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதனை படைப்பாக்கம் செய்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்க ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் பேராசிரியை மாரியம்மாள், ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் பேராசிரியர் டாக்டர் பாஸ்கர், ஆலோசனை கமிட்டியின் சார்பில் பேராசிரியர் சந்திரமோகன் மற்றும் கருத்தரங்க ஏற்பாட்டுகுழு, பதிவுக்குழு மற்றும் விருந்தோம்பல் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story