தந்தை, 2 மகள்களுக்கு அரிவாள் வெட்டு


தந்தை, 2 மகள்களுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் தந்தை, 2 மகள்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

தென்காசி

கடையநல்லூர்

கடையநல்லூர் அருகே இடைகாலை அடுத்த அருணகிரிபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் பண்டாரசாமி (வயது 57). இவரது மகள்கள் கலைச்செல்வி (30), மகாலட்சுமி (20). இவர்களுக்கும், இதே பகுதியில் குடியிருக்கும் நாராயணனின் மற்றொரு மகன் முருகையா (47) ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் பண்டாரசாமி, கலைச்செல்வி, மகாலட்சுமி ஆகியோர் பிரச்சினைக்குரிய இடத்தில் நேற்று காலை வீடு கட்ட வானம் தோண்டியதாக கூறப்படுகிறது.

அப்போது அண்ணன், தம்பிகளான பண்டாரசாமி மற்றும் முருகையா ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த முருகையா மகன் பூராசா (27) பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால், பண்டாரசாமி, மகாலட்சுமி, கலைச்செல்வி ஆகியோரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தந்தை, மகள்களும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பூராசாவை போலீசார் தேடி வருகின்றனர்.



Next Story