தந்தை-மகன் கைது
இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி வழக்கில் தந்தை-மகன் கைது
கோவை உக்கடத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 22). பட்டதாரியான இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்தார். அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்ற அறிவிப்பை பார்த்தார். உடனே அவர் அதில் இருந்த செல்போன் எண்ணுக்குதொடர்பு கொண்டு பேசினார்.
அதற்கு அவர்கள் விரைவில் அதற்கான அனுமதி வாங்கி தருவதாக கூறியதுடன், அதற்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். உடனே அவர் அதற்கான பணத்தை அந்த நபர்கள் கூறிய வங்கி எண்ணுக்கு செலுத்தினார்.
இப்படி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சத்தை பிரியதர்ஷினி அனுப்பினார். ஆனால் அவரிடம் பேசிய நபர்கள் பன்னாட்டு நிறுவன உணவகததுக்கான அனுமதியை வாங்கிக்கொடுக்க வில்லை.
இது பற்றிய புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்பிரவேஷ் பிரசாத் (வயது 54), அவருடைய மகன் சுராஜ்குமார் (24) ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தந்தை-மகன் 2 பேரும் ஒரு மோசடி வழக்கில் கைதாகி ஜார்க்கண்ட் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் ஜார்க்கண்ட் மாநிலம் சென்றனர். பின்னர் அவர்கள் தந்தை-மகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.