விழுப்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்ற தந்தை- மகன் கைது
விழுப்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்ற தந்தை- மகன் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்
விழுப்புரம்,
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை ஆவின் பாலகம் எதிரே உள்ள ஒரு கடையில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ஞானவேல் (வயது 42), அவரது மகன் ரூபன் (19) ஆகிய இருவரும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஞானவேல், ரூபன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 436 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story