தந்தை-மகனை தாக்கி பணம் பறிப்பு


தந்தை-மகனை தாக்கி பணம் பறிப்பு
x

தந்தை-மகனை தாக்கி பணம் பறித்தவர்கள் போலீசார் தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்தவர் ராஜா. இவர் சொந்தமாக கன்டெய்னர் லாரிகள் வைத்து உள்ளார். இவர் கடந்த 22-ந் தேதி தனது மகனுடன் பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், தந்தை- மகனை தாக்கி அவர்கள் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story