ரெயிலில் அடிபட்டு தந்தை-குழந்தை பலி


நெல்லை அருகே ரெயிலில் அடிபட்டு தந்தையும், 5 வயது குழந்தையும் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை அருகே ரெயிலில் அடிபட்டு தந்தையும், 5 வயது குழந்தையும் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 பேர் உடல்

நெல்லை அருகே மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவில் 2 பேர் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு ஒரு வாலிபரும், ஒரு குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டனர். இதுெதாடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தந்தை -மகன்

தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகரை சேர்ந்தவர் சிவா என்ற உச்சிமாகாளி (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருடைய 5 வயது குழந்தை முத்துசெல்வன்.

நேற்று இரவு சிவா தனது குழந்தை முத்துசெல்வனை அழைத்துக்கொண்டு அன்னைநகர் ரெயில்வே தண்டவாளம் அருகில் உள்ள தனக்கு ெசாந்தமான இடத்தை பார்க்க சென்றார்.

ரெயிலில் அடிபட்டு பலி

அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சிவா, குழந்தை முத்துசெல்வன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானது தெரியவந்தது.

எனினும் அவர் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

உறவினர்கள் கதறல்

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுதொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story