வேன் மோதி தந்தை, மகன் பலி


வேன் மோதி தந்தை, மகன் பலி
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே காரில் சென்ற போது வேன் மோதி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே காரில் சென்ற போது வேன் மோதி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் தொழிலாளி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளை யத்தை சேர்ந்தவர் பண்ணாரி (வயது55). பனியன் தொழிலாளி. இவருடைய மகன் கோபால் (28). விசைத்தறி மெக்கானிக். இவருக்கு கால்களில் நீர் கட்டி இருந்தது.

அதற்கு மந்திரித்து கயிறு கட்டுவதற்காக தனது தந்தை பண்ணா ரியுடன் உடுமலை அருகே ஆமந்தக்கடவு பகுதிக்கு நேற்று காலை தனது காரில் சென்றார். பல்லடம்- உடுமலை ரோடு சுல்தான் பேட்டை ஒன்றியம் சின்னப்புத்தூர் அருகே கார் சென்று கொண்டு இருந்தது.

தந்தை- மகன் சாவு

காரை கோபால் ஓட்டி சென்றார். முன்சீட்டில் பண்ணாரி உட் கார்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த வேன் கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த கோபால், அவரது தந்தை பண்ணாரி ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. வேன் சேதமடைந்தது. இது குறித்த தகவலின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், காரின் கதவை உடைத்து உள்ளே பிணமாக கிடந்த பண்ணாரி, கோபால் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.

வேன் டிரைவர் காயம்

பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வேன் டிரைவரான சூலூரைச் சேர்ந்த டிரைவர் அருண் பிரசாத் காயம் அடைந்தார். அவர், பல்லடம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது விபத்து சுல்தான்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story