விபத்தில் தந்தை பரிதாப சாவு


விபத்தில் தந்தை பரிதாப சாவு
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி முடிந்து மகனுடன் நடந்து வந்தபோது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சுரேஷ் (வயது 49). இவரது மகன் விஷ்ணு சர்மா (16) என்பவர் ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

பள்ளி முடிந்து வாகனத்தில் வரும் மகனை சுரேஷ் இடையர்வலசை விலக்கு பகுதியில் இருந்து அழைத்துகொண்டு வீட்டிற்கு நடந்து செல்வது வழக்கம்.

இவ்வாறு நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வந்த மகனை அழைத்து கொண்டு சுரேஷ் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்தனர்.

108 ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுரேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மகன் விஷ்ணு சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து அரியகுடிபுதூர் வெள்ளைச்சாமி (40) என்பவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story