அதிர்ச்சியில் தந்தையும் சாவு


அதிர்ச்சியில் தந்தையும் சாவு
x

நிதி நிறுவன ஊழியர் திட்டியதால் வாலிபர் தற்கொலை அதிர்ச்சியில் தந்தையும் சாவு

விழுப்புரம்

விழுப்புரம்

வாலிபர் தற்கொலை

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை வானக்கார குப்புசாமி தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் ரவிக்குமார்(வயது 22). இவர் விழுப்புரம் ரெயில்வே நிலையத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

கடந்த ஆண்டு ரவிக்குமாரின் அண்ணன் பாபுராஜ், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று அதன் மூலம் மோட்டார் சைக்கிளை வாங்கி ரவிக்குமாருக்கு கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதமாக ரவிக்குமார், கடனுக்கான தவணை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த நிதி நிறுவன ஊழியர் மேகநாதன் என்பவர், ரவிக்குமார் வீட்டிற்கு நேரில் சென்று அவரை தவணை தொகை கட்டக்கோரி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிக்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிர்ச்சியில் தந்தையும் சாவு

ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த செல்வம், தனது மகன் இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story