பழுதடைந்த அடிபம்பை சரிசெய்ய வேண்டும்


பழுதடைந்த அடிபம்பை சரிசெய்ய வேண்டும்
x

பழுதடைந்த அடிபம்பை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் வடக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை அருகில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த அடிபம்பு பழுதடைந்து சாய்ந்த நிலையில் கீழே கிடக்கிறது. தற்போது இந்த அடிபம்பு பயன்பாடு இன்றி உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story