ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27 -ந்தேதி இடைத்தேர்தல்
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் இடைத்தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
புதுடெல்லி
மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களின் சட்டப்பேரவையில் பதவிக் காலம் இந்தாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் மூன்று மாநிலங்களிலும் உள்ள 60 சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் மூன்று மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டச்சபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:
➤வேட்புமனு தாக்கல் தொடக்கம் -ஜனவரி 31
➤வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் -பிப்ரவரி 7
➤வேட்புமனு பரிசீலனை -பிப்ரவரி 8
➤வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் -பிப்ரவரி 10
➤வாக்குப்பதிவு -பிப்ரவரி 27
➤வாக்கு எண்ணிக்கை - மார்ச் 2