அன்னை தாமிரபரணி நதி தூய்மை கூட்டமைப்பு கூட்டம்
நெல்லையில் அன்னை தாமிரபரணி நதி தூய்மை கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
அன்னை தாமிரபரணி நதி தூய்மை கூட்டமைப்பு கூட்டம் நெல்லை அருகன்குளம் கோசாலையில் நடந்தது. அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நதிகளின் ஒருங்கிணைப்பாளர் அன்னை ஞானேஸ்வரிகிரி அம்மாள் தலைமை தாங்கினார். எட்டெழுத்து பெருமாள் கோவில் நிர்வாகி வரதராஜூ சுவாமிகள், தூத்துக்குடி மாவட்ட புஷ்கரணி பொறுப்பாளர் வக்கீல் ஆறுமுகம், நெல்லை புஷ்கரணி பொறுப்பாளர் வக்கீல் அசோக், நஞ்சை அறக்கட்டளை நிறுவனர் சுந்தர்ராஜன் மற்றும் பாண்டியன், காளிமுத்து, துர்காதேவி, ராஜாத்தி, ஜெயக்குமார், அர்ஜூன், இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு தாமிரபரணி நதியை தூய்மையாக வைப்பது குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில் வருகிற மே மாதம் 2-வது வாரம் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதி பாயும் வழித்தடங்களில் தூய்மை செய்யும் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story